காலாண்டு தர்பியா - கால் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சி
- Jun 5, 2024
- 2 min read
இடம்: அல் இஸ்லாஹ் சொசைட்டி, முஹர்ரக்
நாள்: 31-மே மாதம் 2024
தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டர் துவங்கி
கால் நூற்றாண்டு நிறைவு செய்ததை நினைவுகூறும் வண்ணமும், காலாண்டு தர்பியாக நிகழ்வாகவும் நிகழ்ச்சிநிரல் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
செயலாளரான சகோதரர் அன்வர்சதாத் தலைமையேற்று நடத்தினார்
கால் நூற்றாண்டு நிறைவு நிகழ்ச்சியாக இது இருப்பதும்
இந்தியா,சவுதி, கத்தார், குவைத் நாடுகளிலிருந்து நிர்வாகிகள் வருகை தந்திருப்பதும்
கொடுக்கல் வாங்கல், வியாபார நோக்கமின்றி, இறைவனுக்காக, அவனது உவப்புக்காக நாம் ஒன்றினைந்திருப்பதும் இந்நிகழ்வின் தனி சிறப்புகளாகும் என்றார் அவர்
தலைமை பொறுப்பாளர் சகோதரர் அப்துர் ரவூஃப் அவர்கள்
பஹ்ரைனில், தமிழ் இஸ்லாமிக் சென்டர் துவக்கப்பட்ட ஆரம்ப நாட்களிலிருந்த சிரமங்களையும், அதன்பொருட்டு காத்த பொறுமையையும், பின்னர் கிடைக்கப்பெற்ற இறைஉதவியையும்
பஹ்ரைனில் ஜமாஅத் கடந்துவந்த பாதை என்ற தலைப்பின்கீழ் உரையாற்றினார்.
அதனைத்தொடர்ந்து, கால் நூற்றாண்டு நிறைவு செய்தமைக்கு வாழ்த்துரையாக காணெலி ஒளிபரப்பப்பட்டது.
காணெலி வாயிலாக வாழ்த்துரை வழங்கிய டாக்டர் KVS ஹபீப் முஹம்மது அவர்கள்
"நல்ல தலைமை,வலுவான குழு" அமையப்பெற்றால் மட்டுமே எந்த ஒரு அமைப்பும் நீடித்திருக்கும்,
அத்தகைய வாய்ப்பு தமிழ் இஸ்லாமிக் சென்டருக்கு அமையப்பெற்றிருப்பதே இந்த அமைப்பு இன்றைக்கு நன்கு வளர்ந்திருப்பதற்கான காரணம் என்றார்
அதனைத்தொடர்ந்து நூஹ் மஹ்ழரி அவர்கள் வாழ்த்துரை வழங்கினார்
பின்னர் வாழ்த்துரை வழங்கிய, ஷெய்க் அகார் முஹம்மது அவர்கள்
"தூய்மையான உள்ளத்துடனும், எளிமையான செயற்பாட்டாலும் துவங்கிய ஆரம்ப நாட்களிலியே இது வளர்ச்சிபெறும், பலம்பெறும் என்றே கணித்திருந்தேன்,
இதன்ஆரம்பகால நிர்வாகிகளையும் அவர் நினைவுகூர்ந்தார்
அதனைத்தொடர்ந்து சென்னை மெட்ரோ நாஜிம்
அதாவுல்லாஹ் சாஹிப் சொற்பொழிவாற்றினார்
வலுவான இறைநம்பிக்கையாளரை இறைவன் நேசிக்கிறான்,
அவர்கள் இறைநம்பிக்கையில், பொருளாதாரத்தில், உடல்நலத்தில், அறிவாற்றலில், ஒய்வுநேரத்தால் வலிமையானவர்கள்
இத்தகைய வலிமையானவர்களால் இஸ்லாமியப் பணியை செவ்வையாக நிறைவேற்ற முடியும்.
வளைகுடா வாய்ப்பு, பொருளீட்டலுடன் இஸ்லாமியப் பணியை செவ்வையாக நிறைவேற்ற வாய்ப்பளிக்கிறது.
நம் காரியங்களில் வெற்றி கிடைத்தால் நாம் அதிகமதிகம் இறைவனிடம் மன்னிப்பு கோர வேண்டும்,
ஏனெனில் நாம் செய்த காரியங்களில், தவறோ,பிழையோ இருப்பின் அதன்பொருட்டு மன்னிப்பான் இறைவன் என்றார்
அமீரே ஹல்காவாக பொறுப்பேற்ற பின் முதன்முறையாக பஹ்ரைன் வருகைதந்த மௌலவி ஹனிபா மன்பயீ அவர்கள்
இஸ்லாமியப் பணியாற்ற, முன்களப்பணியாளர்களாக முன்வாருங்கள்
ஏதேனும் காரணம் சொல்லியோ, சாக்குபோக்கி சொல்லியோ விலகிச் செல்லாதீர்கள்.
முனைப்பு காட்டினால் இறைஉதவி நிச்சயம் கிட்டும் என்பதற்கு பஹ்ரைன் ஜமாஅத்தின் ஆரம்ப நாட்களே சாட்சி
வாராந்த வகுப்புகளோடு, காலாண்டு நிகழ்ச்சி நிரலோடு நின்றுவிடாதீர்கள்,
இஸ்லாமிய பணியாற்ற, முன்களப்பணியாளர்களாக முன்வாருங்கள்
எல்லா படைப்புகளும் அதன் நோக்கங்களை நிறைவேற்றுகின்றது.
ஆனால் மனிதர்களான நாம் இறைவனது கட்டளைகளை நிறைவேற்றி
அடிமைத்தனத்தை வெளிப்படுத்துகிறோமா?
பிரதிநிதிகளான நாம், இறைவனது பூமியில் கலீபாவாக செயல்படுகிறோமா?
மறுமைக்கு பகரமாக இவ்வுலக வாழ்வை இறைவனிடம் விலைக்கு விற்றுவிட்டவர்கள் நாம், அந்த ஒப்பந்தத்தை, உடன்படிக்கையை சரிவர நிறைவேற்றுகிறோமா?
பேனா அதன் நோக்கத்தை நிறைவேற்றத் தவறினால், தூக்கி எறிகிறோம்
அப்படியானால், மனித படைப்பின் நோக்கத்தை நிறைவேற்ற தவறினால் என்னாகும்? என கேள்விகளை எழுப்பினார்
எந்த படைப்பும் மனிதனைச் சார்ந்திருக்கவில்லை
ஆனால் மனிதர்களான நாம் மட்டுமே எல்லா படைப்புகளையும் சார்ந்தே இருக்கின்றோம்,
சில படைப்புகள் நேரடியாக இன்னும்சில படைப்புகள் மறைமுகமாக நமக்கு பயன் அளித்துக்கொண்டிருக்கின்றன
இதனை குறித்து, மனிதனுக்காகவே எல்லாவற்றையும் படைத்துள்ளோம் என்கிறது குர்ஆன் 2:29
நன்மைபுரிந்து, தீமைகளைவிட்டும் விலகிக்கொள்வது எளிது
நன்மையை ஏவி, தீமையை தடுத்தல் எளிதல்ல
அதனால்தான் எல்லா கடமைகளையும் நிறைவேற்றும் முஸ்லிம் சமூகம், ஏற்ற கலிமாவை சாட்சி சொல்வதை, சான்று பகவர்வதை விட்டும் பாராமுகமாக இருக்கிறது
எனவே ஏற்ற கலிமாவை சான்று பகர்வதற்காக களப்பணியாற்ற முன்வாருங்கள்
இஸ்லாமிய பணியை குறித்து முதலில் புரிந்துகொள்ளுங்கள்,
புரிந்துகொண்டதை, நம்பிக்கைகொள்ளுங்கள்,
நம்பிக்கைகொண்டதின் பால் பிரியப்படுங்கள், பாசம் கொள்ளுங்கள்,
பாசம் கொண்டதின் பால் தியாகம் செய்ய முன்வாருங்கள்
என சொற்பொழிவாற்றிய அமீரே ஹல்கா அவர்கள், தொடர்ந்து கேள்வி எழுப்பிய சகோதர சகோதரிகளுக்கு விளக்கமளித்தார்
அதிகமான கேள்விகள் சகோதரிகளிடமிருந்து வந்தமைக்காக அவர்களை பாராட்டினார்.
இறுதியாக, துணைத் தலைமை பொறுப்பாளர் சகோ அன்வர்தீன் நன்றியுரைகூற தர்பியா நிகழ்ச்சி நிறைவுற்றது
அல்ஹம்துலில்லாஹ் .
நிகழ்ச்சிநிரல் ஏற்பாட்டாளரும்,பொறுப்பாளருமாகிய சகோதரர் அப்துல் ஹக்கீம் அவர்கள் நிகழ்ச்சி நிரலுக்கான பணியை தன்னார்வலர்கள் உதவியுடன் சிறப்புற நிறைவேற்றித் தந்தார்
அல்லாஹ், எல்லோருடைய பணியையும் ஏற்றுக்கொள்வானாக, ஆமீன்.
நிஜார் முஹம்மது
ஊடகப் பிரிவு
தாருல் ஈமான்-தமிழ் இஸ்லாமிக் சென்டர்
コメント