இஃப்தார் நிகழ்ச்சி
- Mar 15
- 1 min read
இப்தார் ஏற்பாடு: தாருல் ஈமான்-தமிழ் இஸ்லாமிக்சென்டர்
இடம்: அல்-இஸ்லாஹ் சொசைட்டி
நாள்: 14 மார்ச் 2025
இறைவன் அருளால், நோன்பு திறப்பு நிகழ்ச்சிக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 600க்கும் அதிகமான நோன்பாளிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.
இப்தார் உணவில் தமிழ் முஸ்லிம்களின் பாரம்பரிய உணவான அரிசிக்கஞ்சி, போன்றவை இடம்பெற்றிருந்தது.
தமிழ் இஸ்லாமிக் சென்டரைச் சேர்ந்த ஆண் பெண் தன்னார்வலர்கள் இப்தார் உணவுகளை நோன்பாளிகளுக்கு பரிமாறினர்.
நோன்பாளிகளான விருந்தினர்களுக்கு, மஹ்ரிப் தொழுகைக்கான ஏற்பாடு, அவ்விடத்திலேயே செய்யப்பட்டிருந்தது.
அதற்குபின் அரைமணி நேர சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
சகோதரர் அன்வர்தீன் தலைமையேற்று சொற்பொழிவு அமர்வை வழிநடத்தினார்.
கிராஅத் ஓதி அமர்வு துவக்கப்பட்டது.
சகோதரர் அப்துல் அஹது அவர்கள் வருகையாளர்களுக்கு சொற்பொழிவாற்றிட,
இஸ்லாமிய சொற்பொழிவு இனிதே நிறைவுபெற்ற பின்னர்,
உணவு பார்சலாக வினியோகிக்கப்பட, நோன்பாளிகளான விருந்தினர்கள் கலைந்துசென்றனர்.
பல்வேறு அமைப்புகள், இதே நாளில் இஃப்தார் விருந்துக்கு ஏற்பாடு செய்திருந்த நிலையில்,
சிறிதும் குறைவின்றி, எதிர்பார்த்தபடியே 600 நோன்பாளிகள், தங்களது குடும்பத்துடன் கலந்துகொண்டு சிறப்பித்தது, மனநிறைவை அளித்தது
அல்ஹம்துலில்லாஹ்!!!
எப்போதும் போலவே இன்றும், விருந்தினர்களை இன்முகத்துடன் வரவேற்று, கனிவுடன் உபசரித்து மகிழ்ந்தனர், தமிழ்இஸ்லாமிக் சென்டரின் தன்னார்வலர்கள்.
நிகழ்ச்சிக்காக, உழைப்பை நல்கியவர்களுக்கும், திட்டமிடலாலும் தங்களை அர்பணித்துக் கொண்டவர்களுக்கு அல்லாஹ் அதிகமதிகம் நன்மைகளை வாரிவழங்குவானாக,!
ஆமீன்
தகவல் நிஜார் முஹம்மது
ஊடகத்துறை
தாருல் ஈமான்-தமிழ் இஸ்லாமிக்சென்டர்
コメント