சமூக நல்லிணக்க பெருநாள் சந்திப்பு
- Apr 6
- 2 min read
நாள்: 04 ஏப்ரல் 2025
இடம்: அல்-இஸ்லாஹ் சொசைட்டி, பஹ்ரைன்
சமூக நல்லிணக்கத்தை பேணும் பொருட்டு,
பல்சமய தமிழ் சமூகத்தினர் தங்களது குடும்பத்தினருடன் ஒன்றுகூடி ஈத் பெருநாளை கொண்டாட, தாருல் ஈமான் தமிழ் இஸ்லாமிக் சென்டர் ஏற்பாடு செய்திருந்தது.
சகோதரர் பவாஜ், இறைமறை வசனங்களை ஓத, நிகழ்ச்சி துவங்கியது
தலைமை வகித்துப் பேசிய சகோதர் அப்துர் ரவூஃப்
பொருள் இல்லாதவர்க்கு இவ்வுலகத்து வாழ்க்கை இல்லாதது போல (இறை)அருள் இல்லாதவர்க்கு அவ்வுலகத்து வாழ்க்கை இல்லை
என்கிற திருக்குறளை மேற்கோள்காட்டிய அவர்
இறையருள் பெற்றுக்கொள்ள, ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டும்
பெருநாள் அன்றுகூட தொழுகைக்கு செல்லும் முன்னர், ஏழைகளுக்கு பித்ரா தர்மம் வழங்கிய பின்னரே தொழ இஸ்லாம் ஏவுகிறது,
இறையருளைப்பெற தானம் செய்ய இஸ்லாம் வழியுறுத்துகிறது,
அவ்வாறு தானம் செய்யப்பட்ட, வக்ஃப் செய்யப்பட்ட சொத்துக்களை, கல்விக்காக, அநாதைகளான ஆதரவற்றோருக்காக, வட்டி இல்லா கடன் வழங்க, ஏழைகளுக்காக பயன்படுத்தப்படுகிறது.
திருடர்களிடமிருந்தும், ஆக்ரமிப்பாளர்களிடமிருந்தும் காக்க வேண்டிய அரசு
இன்றைக்கு அரசே அந்த சொத்துக்களை திருட சட்டமியற்றுகிறது
ரிசர்வ் வங்கி இருப்பை கபளீகரம் செய்த அரசு, விமான நிலையங்களை, விமான நிறுவனங்களை, பொதுத்துறை நிறுவங்களை, வங்கிகளை விற்று விழுங்கிய அரசு, இப்போது வக்ஃப் சொத்தை விழுங்க சட்டமியற்றி உள்ளது.
இவற்றிலிருந்து மக்களை திசைதிருப்ப மத மோதல்களை உருவாக்குகிறது.
இத்தகைய சூழலில் மத நல்லிணக்கத்தை காப்பது நம்மீது கடமையாக உள்ளது.
இன்னும் பல்லின கலாச்சாரம் காக்கவும், செழித்தோங்கவும் இறைவன்அருளட்டும் என்று வேண்டி நிறைவு செய்தார்.
சிறப்பு பேச்சாளரான முத்தமிழ் சொல்வேந்தர் மன்ற தலைவர் சிங்காரவேலு பாலசுப்ரமணியம் அவர்கள்
25-ஆண்டுகளாக தமிழ் இஸ்லாமிக் சென்டர் ஜனநாயக முறைப்படி நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட்டு இயங்குவதற்காக தனது பாராட்டுடன், பேச துவங்கினார்,
நோன்பு ஈகை உணர்வை அதிகரிக்கச்செய்கிறது, இறைநம்பிக்கையாளர்கள்
இறைவனுக்கு அஞ்சி நேர்மையாக நடந்துகொள்வார்கள்.
சமூக நல்லிணக்கம், சகோதரத்துவம் பேணப்பட வேண்டும்
தேநீரின் தரம் முக்கியம் தேநீர்கோப்பையின் அழங்காரமன்று, அவ்வாறே
வாழ்க்கை தரம் முக்கியம் வாழ்க்கைச் சாதனம் அல்ல.
பசிப்பிணி போக்கியவளின் நோய்ப்பிணி போக்கிய மருத்துவரின் சம்பவத்தை நினைவூ கூர்ந்த அவர் ,
காது கேட்காத ஒருவர் தன்மனைவியின் செவித்திறனை சந்தேகித்ததைப்போல் நாம் பிறரது குறைகளை ஆராயக்கூடாது.
வாசிப்பு நம்மை மேம்படுத்தும், வாழ்வில் வெற்றிபெற்றவர்கள் பிறரை குறைகூறாது சுயமாக முன்னேறியவர்கள்தான், ஆதலால், நாமும் அவ்வாறே முயலவேண்டும் என்றார்.
நகைச்சுவை உணர்வுடனும், பாடல் வரிகளுடனும், கதை அம்சத்துடன் பேசி உற்சாகப்படுத்தினார்.
இறுதியாக பேசிய டிஸ்கவர் இஸ்லாம் அமைப்பின் சகோதரர் அன்வர்தீன்
இறைவேதம் குர்ஆனில் எங்குமே இந்த குர்ஆன் முஸ்லிம்களுக்கு மட்டுமானது என்று கூறாதிருக்க,
அநேகர், இது முஸ்லிம்களுக்கானது என தவற்றிலேயே உள்ளனர், அதை வாசிப்பிலிருந்து விலகிச் செல்கின்றனர் என தனது ஆதங்கத்தை பதிவு செய்தார்.
இந்த வானம், பூமி, தண்ணீர் எப்படி எல்லாருக்குமானதோ, அவ்வாறே இறைவேதமான குர்ஆன் எல்லோருக்குமானது, அதை வாசியுங்கள், அதில் ஏதேனும் முரன்பாட்டு இருப்பதாக உணர்ந்தால், தயக்கமின்றி உங்களை இந்த விருந்துக்கு அழைத்தவரை அணுகுங்கள் என்றார்.
எல்லாவற்றிற்கும் பயிற்சி எடுத்துக்கொள்ளும் மனிதர்கள், வாழ்க்கை பயிற்சியை எடுத்துக்கொள்வதில்லை.
அதனால்தான் மனிதர்கள் கவலைக்கு உள்ளாகிறார்கள்,
இறைவன் தந்த வாழ்க்கை பயிற்சிதான் நோன்பு என்று கூறினார்.
சகோதரர் அன்வர் சதாத் நிகழ்ச்சியை தொகுத்து வழங்கி, நன்றியுரை கூறி நிறைவு செய்ய வருகையாளர்களுக்கு பிரியாணி உணவும், சைவ உணவும் பரிமாறப்பட்டது.
நேர்த்தியாக திட்டமிடப்பட்ட நிகழ்ச்சி நிரல் சிறப்பாக நடந்து முடிந்தது.
அல்ஹம்துலில்லாஹ் !!! (எல்லாப் புகழமும் இறைவனுக்கே)
நிகழ்ச்சிக்காக உழைப்பை நல்கிய தன்னார்வர்களான தமிழ் இஸ்லாமிக் சென்டரைச் சேர்ந்த சகோதர சகோதரிகளுக்கும், நிர்வாகிகளுக்கும் இறைவன்அருள்புரியட்டும்.
ஆமீன்
தகவல்
நிஜார் முஹம்மது
ஊடகத்துறை
தாருல் ஈமான் - தமிழ்இஸ்லாமிக் சென்டர்
பஹ்ரைன்
PHOTO GALLERY
Program Full Video
Comentários