ரியாத் மாகாண புதிய பொறுப்பாளர்
- Jan 14, 2024
- 1 min read
எல்லாப் புகழும் இறைவனுக்கே!
சகோதரர் அப்துல் காதர் அவர்கள் ஜமாஅத்தின் ரியாத் மாகாண பொறுப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
இதற்கு முன்பு டாக்டர். முஹையுதீன் அவர்கள் இப்பொறுப்பில் இருந்தார் என குறிப்பிடத்தக்கது.

பஹ்ரைனில் 1999-ல் ஜமாஅத் துவங்கிய காலம் முதல், ஜமாஅத்தின் வளர்ச்சிக்கும், உழியர்களின் உருவாக்கத்திற்கும் பெரும் பங்காற்றியவர்.
முதல் சந்திப்பிலேயே எவரையும் கவர்ந்துவிடும் இயல்பான பேச்சுக்கு சொந்தக்காரர். இறுக்கமான இடங்களையும், இதயங்களையும் தனது நகைச்சுவையும், விவேகமும் மிக்க அணுகுமுறையால் கலகலப்பாகிவிடும் வல்லமையை அல்லாஹ் அவருக்கு வழங்கியுள்ளான்.
இறையருளால் எல்லோரின் நேசத்திற்கும் உரித்தானவர். பொறுமை, கனிவு, பிறரின் தவறுகளை மன்னித்தல், எல்லோருக்கும் உதவுதல், அரவணைத்தல், இன்முகம், தலைமைக்கு கட்டுப்படுத்தல் என்பன போன்ற நற்குணங்களால் கூட்டமைப்பிற்கு வலு சேர்த்தவர், சேர்த்துக் கொண்டிருப்பவர்.
அபுதாபியில் சகோதரர். முனாஸீத்தீன், கத்தாரில் சகோதரர். ஷாகுல், தமிழகத்தில் மௌலவி. முஹம்மத் நூஹ் மஹ்ழரி ஆகியோரின் வரிசையில் தற்போது ரியாத்தில் நமது சகோதரர். அப்துல் காதர் அவர்களும் பஹ்ரைனிலிருந்து உருவாகிய நன்முத்துக்கள் என்பது மகிழ்வான செய்தியாகும்.
இது அல்லாஹ் செய்த பேருதவியும், மகத்தான அருளுமாகும். இவர்களின் பணி சிறக்க வல்ல ரஹ்மானிடம் துஆச் செய்வோம்.
"அன்பின் இயக்க சகோதர சகோதரிகளே! உங்களின் எந்த சிறிய பணியும் வீணாகிவிடாது. இறைதிருப்தியை பெறவேண்டும் எனும் தூய உள்ளத்துடன் செய்யப்படும் உங்களின் உழைப்பு எதோ ஓரிடத்தில் வித்தாகும்! அது விருட்சமாகும்!! அல்லாஹ் எமது நற்பணிகளை ஏற்றுக்கொள்வானாக!!! ஆமீன்!"





Comments