மாபெரும் இஃப்தார் நிகழ்ச்சி
- Mar 23, 2024
- 1 min read
இஃப்தார் ஏற்பாடு : தாருல் ஈமான்-தமிழ் இஸ்லாமிக்சென்டர்
இடம் : அல்-இஸ்லாஹ் சொசைட்டி
நாள்: 22 மார்ச் 2024
அல்ஹம்துலில்லாஹ் !!!
இறைவன் அருளால், மாபெரும் நோன்பு திறப்பு விருந்து ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என 600க்கும் அதிகமான நோன்பாளிகள் கலந்துகொண்டு சிறப்பித்தனர்.

இப்தார் உணவில் தமிழ் முஸ்லிம்களின் பாரம்பரிய உணவான அரிசிக்கஞ்சி, போன்றவை இடம்பெற்றிருந்தது.
தமிழ் இஸ்லாமிக் சென்டரைச் சேர்ந்த ஆண் பெண் தன்னார்வலர்கள் இப்தார் உணவுகளை நோன்பாளிகளுக்கு பரிமாறினர்.
விருந்தினர்களுக்கு, மஹ்ரிப் தொழுகைக்கான ஏற்பாடு, அவ்விடத்திலேயே செய்யப்பட்டிருந்தது.
அதற்குபின் அரைமணி நேர சொற்பொழிவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டிருந்தது.
தாருல் ஈமான் துணை பொறுப்பாளர் சகோதரர் அன்வர்தீன் அவர்கள் இந்நிகழ்வை வழிநடத்தினார்
சொற்பொழிவாற்றிய மௌலவி இஸ்ஹாக் அவர்கள்...
"சிறந்தநோன்பாளி, நோன்பு நோற்றிருக்கும் வேளையில், அதிகமதிகம் அல்லாஹ்வின் தொடர்பில் இருப்பவர், அல்லாஹ்வின் நினைவில் இருப்பவர், அல்லாஹ்விடம் உறவாடுகிறவர்"
"மீன்கள் நீரால் உயிரோடு இருப்பதைப்போல முஃமீன்கள் இறைநினைவால் உயிர்ப்போடு இருக்கவேண்டும்"
என மேற்கோள்காட்டினார்.

இன்னும், நம்மை அல்லாஹ்வை நினைவுகூர்வதை விட்டும் திசைதிருப்ப
இஸ்லாத்தின் விழுமியங்களை(Values) கைவிட்டுவதற்காக
சைத்தானும், அவனது பரிவாரங்களும் திட்டமிட்டு நமக்கெதிராக செயல்பட்டுவருகின்றன என்றார்.
"அல்லாஹ் நம்மிடம் உடனுக்குடன் பேச ஆறு திக்ருகளை நினைவுகூறுங்கள்"
திக்ரில் திளைத்திருப்பவர்களை நோக்கி வானவர்கள் "நீங்கள் உங்களது ஹலாலான ஹாஜத்துகள்,நாட்டங்களை எதுவாகிலும் கேளுங்கள்,அல்லாஹ் நிறைவேற்றித்தருவான்"
முழுகுர்ஆனை ஓதிமுடிக்க முடியதவர்கள் "சூரா பகரா, ஆலஇம்ரான், தாஹா இவைகளை ஓதுங்கள் அல்லாஹ் உங்களது ஹலாலான ஹாஜத்துகள், நாட்டங்களை நிறைவேற்றி விடுவான்" என ஹதீஸ்களை மேற்கோள்காட்டினார்.
இன்னும், திஃக்ரில் திளைத்திருப்பது, நிறைவேறாத பல ஆண்டு ஆசைகள், நாட்டங்களை நிறைவேற்றித்தரும் என திக்ரின் முக்கியத்துவத்தை கூற
இஸ்லாமிய சொற்பொழிவு இனிதே நிறைவுபெற்றது.
சிறப்பு சொற்பொழிவுக்கு பின்னர், உணவு பார்சலாக வினியோகிக்கப்பட, நோன்பாளிகளான விருந்தினர்கள் கலைந்துசென்றனர்.
அல்ஹம்துலில்லாஹ்!!!
நிகழ்ச்சிகாக பொருளாலும், உடல் உழைப்பாலும், திட்டமிடலாலும் தங்களை அர்பணித்துக்கொண்டவர்களுக்கு அல்லாஹ் அதிகமதிகம் நன்மைகளை வாரிவழங்குவானாக, ஆமீன்
நமது இறுதிமுடிவு இனிதாகட்டும் !
மண்ணறை வாழ்வு மணமாகட்டும் !!
மறுமைவாழ்வு மகிழ்ச்சி தரட்டும் !!!
தகவல்
ஊடகத்துறை - தாருல் ஈமான்
தமிழ் இஸ்லாமிக்சென்டர்
பஹ்ரைன்
தாருல் ஈமான் - செய்திகள்
நிகழ்ச்சியின் முழு காணொளி
Comentarios