ஊடகத்தில் நாம்
- Jan 7, 2024
- 1 min read
நாள் : 6-ஜனவரி-2024
நேரம் : மாலை 7 மணிக்கு
இடம் : முஹர்ரக் அல் இஸ்லாஹ் ஹால், பஹ்ரைன்
சகோதரர் V.S. முஹம்மத் அமீன் அவர்களின் தலைமையில்
சிறப்பு விருந்தினர் சகோ. வல்லம் பஷீர் அவர்களின் முன்னிலையிலும் ஊடகத்தில் நாம் எனும் தலைப்பில் கருத்துபரிமாற்றம் நடைபெற்றது.

அச்சு ஊடகத்தின் முக்கியத்துவம் குறித்து சகோ. அன்வர்தீன் உரையாற்றினார். அச்சு ஊடகம் வழியே செய்திகள் மட்டுமின்றி எல்லா தகவல்களும் பெற முடிகிறது. அச்சு ஊடகம், மொழி வளத்தை அதிகரிக்க செய்கிறது இன்னும் சிந்தனை தெளிவை வளப்படுத்துகிறது என்பதையெல்லாம் விளக்கினார்.
காட்சி ஊடகத்தின் முக்கியத்துவம் குறித்து நமது பொறுப்பாளர் சகோ.அப்துர் ரவூப் எடுத்துரைத்தார்.
காட்சி ஊடகத்தை புறக்கணித்தால், அதில் அதீத ஈடுபாடுடைய முஸ்லிம்கள் வழிபிறழ்ந்து நடனம் போன்ற ஷைத்தானியத்தின் பக்கம் போய்விடும் அவலங்களை உதாரணங்களை மேற்கோள்காட்டி பேசினார்.
இறுதியாக, சமூக ஊடகத்தின் முக்கியத்துவம் குறித்து ரியாத்திலிருந்து வருகை புரிந்த சகோ. அப்துல் காதர் அவர்கள் விளக்கினார்கள். சமூக ஊடகம் எளிதில், எல்லோராலும், இலவசமாகவும் இயல்பாகவும் பயன்படுத்தப்படுவதையும், அது Algorithm அடிப்பையாக கொண்டு இயங்குகிறது என தொழில்நுட்ப வளர்ச்சியை பற்றி கூறினார்.
இந்நிகழ்ச்சியின் நெறியாளராக சமரசம் பொறுப்பாசியரான சகோ. V.S. முஹம்மத் ஆமீன் அவர்கள் ஊடகத்தின் வலிமையினாலேயே காசா படுகொலைகள் வெளியுலகின் வெளிச்சத்திற்கு வந்தடைகின்றன என பேசினார்.
சிறப்பு விருந்தினர் சகோ. வல்லம் பஷீர் அவர்கள் ED போன்ற அதிகார அமைப்புகளே அச்சப்படுவது ஊடகத்தை கண்டுத்தான் என விளக்கினார்.
நிகழ்வின் இறுதியாக சகோ. நிஜார் முஹம்மது அவர்கள் நன்றியுரை கூறி இனிதே முடிவடையச் செய்தார்
சகோ. முஹம்மத் யூஸுஃப் இந்நிகழ்ச்சியை தொகுத்து வழங்கினார்.
அல்ஹம்துலில்லாஹ்!






Comments