top of page
Search

உள்ளத்திற்கு ஒளியூட்டும் ரமழான்

  • Mar 3, 2024
  • 1 min read

Updated: Mar 4, 2024

1-பிப்ரவரி-2024

அல்-இஸ்லாஹ் சொசைட்டி,

முஹர்ரக், பஹ்ரைன்


ரமழானை வரவேற்கும் விதமாக, ரமழானுக்கு தயாராகும் பொருட்டு, ஆன்மீக வழிகாட்டலுக்கான நிகழ்வாக ரமழானை வரவேற்போம் நிகழ்ச்சி இனிதே நடைபெற்றது,

அல்ஹம்துலில்லாஹ்!

நமது இளம்பிறையின் மாணவர் சகோ. ஹசீர் அவர்களது கிராஅத்துடன் நிகழ்ச்சி துவக்கியது.

துவக்க உரையாற்றிய பொதுச் செயலாளர் சகோ. அன்வர் சதாத் அவர்கள்
நோன்பு வயிற்றுக்கு மட்டுமானதல்ல, எல்லா உறுப்பும் நோன்பு நோற்க வேண்டும் அதன்மூலம்தான் இறையச்சம் உண்டாகும் என்றார்...
நமக்காக கத்தாரிலிருந்து வருகை தந்த அஷ்ஷெய்க் ஜியாவுத்தீன் மதனி அவர்கள்
உள்ளத்திற்கு ஒளியூட்டும் ரமழான் எனும் தலைப்பில் சிறப்புரை ஆற்றினார்கள்.

ஹவா, மனோஇச்சையால்   இருண்டுகிடக்கும் உள்ளத்திற்கு தக்வா எனும் ஒளி பாய்ச்சப்படவேண்டும்.

ரமழான் Appஐ உள்ளத்தில் Install செய்வதால், ரமழானை மிகச்சரியான முறையில் பயன்படுத்திக்கொள்வதனால், தக்வா எனும் வெளிச்சம் உள்ளத்திற்கு கிடைக்கும்.
தக்வா பெற்ற உள்ளம் அமைதிபெறும்.

தக்வா பெற்ற உள்ளம் பொறாமை, புறம்பேசுவது, பிறருக்கு குழிபறிப்பது பிறரை இழிவாக கருதுவது போன்றவற்றில் ஈடுபடாது, Protector ஆக இருந்து காக்கும்.
கூட்டாக அமர்ந்து உணவுத்தட்டில், சகோதரனின் மாமிசத்தை உண்பதை வெறுப்பதைப்போல்,

சகோதரனைப்பற்றிய புறம்பேசுவதை வெறுத்திட செய்வது தக்வா.

கலீஃபா உமர் (ரலி) அவர்கள் காய்ந்த ரொட்டியை தண்ணீரில் நனைத்து உண்டதும்,
ஆட்சியாளர் அப்துல் அஜீஸ் (ரஹ்) அவர்கள் திராட்சை உண்ண ஆசை உண்டாகி, தினார் கிடைக்காமல் ஏங்கியது எல்லாம் தக்வா ஏற்படுத்திய மாற்றத்தினால்தான்.
என இறையச்சத்தை வலியுறுத்தி பேசினார், இன்னும் தக்வாவை பெற்றுக்கொள்ளும் மாதம் ரமழான்தான் என்றார்...

நிகழ்ச்சியின் இறுதியாக நன்றியுரை கூறிய சகோ. அமீர் அவர்கள்
விலங்குகள்கூட, உணவளிக்கும் மனிதர்களுக்கு அதற்குறிய மொழியில் நன்றிபாராட்டுகிறது.

ஆனால், மனிதர்கள் தன் இறைவனுக்கு நன்றிசெலுத்துவதில் குறைவுசெய்கின்றனர். அவ்வாறின்றி அதிகமதிகம் நன்றிசெலுத்திட வேண்டும் என்று மேற்கோள்காட்டியவர், நிகழ்ச்சிக்கு வருகைதந்தவர்கள், நிகழ்ச்சிக்காக உழைத்தவர்கள் அனைவருக்கும் நன்றிகூற..

இனிதே நிகழ்ச்சி நிறைவுற்றது.
நிகழ்ச்சிக்கு, திரளாக ஆண்கள், பெண்கள், சிறார்கள் வருகைதந்து அரங்கை நிரம்பச்செய்திருந்தனர்.

அல்ஹம்துலில்லாஹ்...!

நிகழ்ச்சியின் நோக்கமான இறையச்சம் தரும் ரமழானில் நாம் யாவரும் இறையச்சம் பெற்றுக்கொள்ள இறைவன்அருள்புரியட்டுமாக.

ஆமீன்

வெளியீடு

நிஜார் முஹம்மது - ஊடகத்துறை,

தாருல் ஈமான் - தமிழ் இஸ்லாமிக் சென்டர்

பஹ்ரைன்


புகைப்படங்கள்




காணொளி



 
 
 

Recent Posts

See All
காலாண்டு தர்பியா நிகழ்ச்சி "இயக்கமும் நாமும்"

19 செப்டம்பர் 2025, அன்பு இயக்க உறவுகளுக்கு, அஸ்ஸலாமு அலைக்கும் வ ரஹ்மத்துல்லாஹி வ பரக்காத்துஹூ !!! நமது ஜமாத்தின் காலாண்டு தர்பியா "இயக்கமும் நாமும்" என்ற கருப்பொருளில் இந்த நிகழ்ச்சி சிறப்பாக நடைபெ

 
 
 

Comments

Rated 0 out of 5 stars.
No ratings yet

Add a rating
bottom of page